Sunday, March 21, 2010

தாயுமானவன்

என்னை அதி காலை
எழுப்புகிறான்…

அவன் உண்கையில்
எனக்கு ஒரு வாய் தந்து
அமுதம் படைக்கிறான் ..

இது வேண்டாம்
அது உடுத்து என்று
ஆசை சொல்லி சிரிக்கிறான்…

அலுவலகம் செல்கையில்
அழகாய் கைஅசைத்து
பார்த்து போ என
கிளி பேச்சு பேசுகிறான்

அவன் வளர்கிறான்
நான் குழந்தைஆகிறேன்
தாயான
என் மகனிடம்

நினைவுகள் வாழும்

வீட்டை சுற்றி
மரங்கள்
வாழ்கின்றன

ஒவ்வொன்றும்
ஒவ்வொரு நாள்
நடப்பட்டது.

அவள் பிறந்த நாளன்று
ஒன்று.

இரண்டாம் திருமணநாளன்று
இரண்டு.

குழந்தை பிறந்த தேதியில்
ஒன்று.

எல்லாம் அவள்
ஆசை படி.

மரம் நடும் நாட்களின்
எண்ணிகையில்
ஒன்று கூடியது
அவள் நினைவு தினம்

வீட்டை சுற்றி
நினைவுகள்
வாழ்கின்றன.

Monday, March 8, 2010

வாழ்க்கை

எல்லா அனுபவமும்
எனக்கு மிகச்சீக்கிரமே
கிடைத்து விடுகிறது

சிறுவ‌ய‌தில்
தந்தையை பிரிந்தேன்
இளம் வயதில்
ம‌னைவியை இழ‌ந்தேன்

அனுப‌வ‌ம் என்றுமே
கை விடுவ‌தில்லை
சிறுவ‌ய‌தில்
த‌ங்கையை வ‌ள‌ர்த்தேன்
இன்று என் பைய‌னை
வ‌ளர்க்கிறேன்

காதலிக்காதீர்கள்...

காதலிக்காதீர்கள்…

தொடக்கம்
உண்டெனில்
முடிவும்
உண்டு
இயற்கையின்
விதி…

காதலும்
கற்றுதந்தாய்
கலவியில்
இன்பமுட்டினாய்..

கண்ணின்
இமையென
இருந்தாய்..

இன்று
கண்ணிரில்
நிற்கிறேன்
இமைமூட‌
மறந்து…

அனுபவம்

அனுபவம்

கிடைக்க பெறுதலும்
கிடைக்க மறுப்பதும்
கிடைத்தது தவறுவதும்
தவறியது கிடைப்பதும்..

ஒவ்வொன்றிலும்
ஒரு
வலி அல்லது
இன்பம்

மனிதனின் ஒட்டம்
இரண்டு எல்லைகளுக்கு
உட்பட்டது
பிறப்பு மற்றும்
இறப்பு

ஓட்டத்தில்
விழுவதும்
எழுவதும்
நிதர்சனம்
ஆனால்
இல‌க்கு ஒன்றே..